ADVERTISEMENT

குடியே கதியான சப் கலெக்டர் மகன்... கடலூரை உலுக்கிய கொலை!

10:10 AM Oct 19, 2021 | kalaimohan

ADVERTISEMENT

கடலூரில் மதுகுடிக்க பணம் தராததால் ஓய்வுபெற்ற சப் கலெக்டர் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் அணைக்குப்பம் மீனாட்சி நகரில் வசிந்துவந்தார் துணை ஆட்சியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுப்பிரமணியன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சுப்பிரமணியன் ஓய்வுபெற்ற நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், பிள்ளைகளுக்குத் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டனர். கார்த்திக் என்ற மகன் மட்டும் வீட்டிலேயே தந்தை சுப்பிரமணியனுடன் இருந்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுவிற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (18.10.2021) காலை இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதன்பிறகு அன்று பிற்பகல் 3 மணியளவில் தந்தை இறந்துவிட்டதாக ப்ரீசர் பாக்ஸ் ஆர்டர் செய்துள்ளான் கார்த்திக். கார்த்திக்கின் வீட்டிற்கு ப்ரீசர் பாக்ஸ் கொண்டு சென்றவர்கள் உள்ளே சென்றதும் அதிர்ந்தனர். காரணம் உள்ளே சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் மகன் கார்த்திக் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வீட்டின் ஒரு அறையில் மலைபோல காலி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் சிகரெட் பெட்டிகளும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. கார்த்திக் எந்த அளவிற்குக் குடிக்கு அடிமையானவர் என்பது அங்கு கிடந்த மதுபாட்டில்களால் ஊர்ஜிதமானது. மது பாட்டில்களுக்கு இடையே படுக்கை இருக்கும் அளவிற்கு குடிக்கு கார்த்திக் அடிமையானது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தந்தையின் பென்ஷன் பணத்தை வாங்கிக் குடித்துவந்ததாகவும், குடிக்கப் பணம் தராததால் இரும்பு கம்பியால் தாக்கி கைகளை உடைத்துக் கொன்றுவிட்டதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளான். குடியே கதியான சப் கலெக்டர் மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT