Advertisment

குடியே கதியான சப் கலெக்டர் மகன்... கடலூரை உலுக்கிய கொலை!

கடலூரில் மதுகுடிக்கபணம் தராததால் ஓய்வுபெற்றசப்கலெக்டர் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம்அணைக்குப்பம்மீனாட்சி நகரில்வசிந்துவந்தார் துணை ஆட்சியராகபணிபுரிந்து ஓய்வுபெற்ற சுப்பிரமணியன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சுப்பிரமணியன் ஓய்வுபெற்ற நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், பிள்ளைகளுக்குத்திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டனர். கார்த்திக் என்ற மகன் மட்டும் வீட்டிலேயேதந்தை சுப்பிரமணியனுடன்இருந்துள்ளார்.

Advertisment

பொறியியல் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுவிற்கு அடிமையானதாகக்கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (18.10.2021) காலை இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதன்பிறகு அன்று பிற்பகல் 3 மணியளவில் தந்தை இறந்துவிட்டதாகப்ரீசர்பாக்ஸ்ஆர்டர்செய்துள்ளான்கார்த்திக். கார்த்திக்கின் வீட்டிற்குப்ரீசர்பாக்ஸ்கொண்டு சென்றவர்கள் உள்ளே சென்றதும் அதிர்ந்தனர். காரணம் உள்ளே சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுபோலீசார்அங்குசென்று விசாரணை நடத்தியதில் மகன் கார்த்திக்முன்னுக்குப்பின்முரணாகப்பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, போலீசார்அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வீட்டின் ஒரு அறையில் மலைபோல காலி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல்சிகரெட்பெட்டிகளும் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. கார்த்திக் எந்தஅளவிற்குக்குடிக்கு அடிமையானவர் என்பது அங்குகிடந்தமதுபாட்டில்களால்ஊர்ஜிதமானது. மது பாட்டில்களுக்கு இடையே படுக்கை இருக்கும் அளவிற்கு குடிக்கு கார்த்திக்அடிமையானது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக்கிடம்போலீசார் நடத்திய விசாரணையில் தந்தையின்பென்ஷன்பணத்தை வாங்கிக் குடித்துவந்ததாகவும், குடிக்கப் பணம் தராததால் இரும்பு கம்பியால் தாக்கி கைகளை உடைத்துக் கொன்றுவிட்டதாகவும்கார்த்திக் தெரிவித்துள்ளான்.குடியே கதியான சப் கலெக்டர் மகன், தந்தையைக் கொலை செய்த சம்பவம்கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore incident police sub collector
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe