nn

மின்வேலியில் காட்டு யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின் வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது அதிகமாகி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கக் கூடிய டிவிஷன் பென்ஷன் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

Advertisment

'மின்வேலியில் தொடர்ந்து யானைகள் இப்படி சிக்கி உயிரிழப்பதைத்தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்; இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. ஏன் இதற்கு இவ்வளவு காலதாமதம் ஆகிறது?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் 'யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத்தடுப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது. நிதி ஒதுக்கீடு தொடர்பான ஒப்புதல் மட்டும் நிலுவையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்ததால் இவை தாமதமானது' எனத்தெரிவித்தார். யானைகள் தொடர்ந்து மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க அரசு தீவிரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக மின்வாரியத்திற்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும்' எனஎச்சரித்தனர்.