ADVERTISEMENT

வட்டிக்கு வாங்கி குடிக்கும் குடிமகன்கள் -திருச்சி கூத்து !

06:01 PM May 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT

திருச்சியில் மது குடிக்க பணம் இல்லாததால் மது குடிப்பவர் ஒருவர் ரூ. 50 வட்டி தருவதாக கூறி ரூ.500 கடனாக வாங்கிக் கொண்டு டாஸ்மாக்கில் குடிக்கிறார்கள். கடந்தமுறை டாஸ்மாக் திறந்த இரண்டு நாளில் தமிழகத்தில் அதிகம் விற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

ADVERTISEMENT


திருச்சி மாவட்டத்தில் 190 கடைகளில் 150 டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. கடைக்கு 20, 10 போலீஸ் வீதம் ஸ்பீக்கர், சாப்பாடு, வாட்டர் என சகல வசதிகளையும் ஏற்பாடுகள் மற்றும் அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் வரதராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சியின் மையப்பகுதியான புத்தூர் நால் ரோடு பகுதியிலுள்ள மதுபானக் கடைக்கு மது அருந்துபவர்கள் வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியான தனிமனித இடைவெளி வட்டத்தில் காலணிகள், ஹெல்மெட், குடை வைத்து இடம் பிடித்தனர்.


காலை 11 மணி வரை 70 பேருக்கு மட்டுமே மதுபானம் வாங்க டோக்கன் கொடுக்கப்பட்டது. மதுபான கடைகளில் கிருமி நாசினிகளை மதுபானம் வாங்க வருபவர்கள் பயன்படுத்திய பிறகே மதுபாட்டில்களை வாங்க அனுமதித்தனர். அதேபோல் முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டது.

கடைக்கு முன்னதாக 5 பேர் மட்டுமே தனிமனித இடத்தில் நிற்கும் அளவிற்கு விரிவான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இதனிடையே புத்தூர் நால் ரோடு பகுதியில் மதுபானம் வாங்க வந்த, அப்பகுதியை சேர்ந்த குடிமகன்கள் பல பேர், மது அருந்துவதற்கு ஒரு வாரத்திற்கு 50 ரூபாய் வட்டி தருவதாக கூறி 500 ரூபாய் கடனாக பெற்று மது குடிக்கிறார்கள்.

அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதற்கு தமிழக பொதுஜனம் வட்டிக்கு கடன் வாங்கி குடிக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT