/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/215_6.jpg)
ஓசூர் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞருக்கு திருஷ்டி கழிக்க வெள்ளாட்டுக் குட்டியை அழைத்து சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரும் இவரது சகோதரியும் கடந்த சில தினங்கள் முன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பலத்த காயங்களுடன் இருந்த முருகனை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.முருகனுக்கு பலரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்திற்கு காரணம் என உறவினர்கள் நம்பினர். இந்நிலையில் முருகன் திருமணம் ஆகாதவர் என்பதால் அவரது குல வழக்கப்படிஉறவினர் மருத்துவமனைக்கே வெள்ளாட்டுக் குட்டியை கொண்டுவந்து அவருக்கு திருஷ்டி சுத்தி பலியிட்டது மருத்துவமனையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)