Advertisment

தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்ட சம்பவம்... இளைஞர் கைது

The incident where a boulder was placed on the rail ... Youth arrested!

Advertisment

கன்னியாகுமரியில் ரயில் தண்டவாளத்தில் கருங்கல் பாறை வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாகஇளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The incident where a boulder was placed on the rail ... Youth arrested!

நேற்று, இரணியல் மற்றும் குழித்துறை வழித்தடங்களுக்கிடையே சென்னையிலிருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் விரைவு ரயில் கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரெனஅதிர்வை உணர்ந்தது. இதனை உணர்ந்த ரயில் ஓட்டுநர் ரயில் மீது ஏதோமோதியதாக அருகில் இருந்த ரயில் நிலையத்திற்குத்தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினர். அதில் கருங்கல் பாறை ஒன்று துண்டு துண்டாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளத்தில் அந்தப் பாறை தற்செயலாக கிடைந்ததா அல்லது ரயிலைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு யாரேனும் இதனை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்தண்டவாளத்தின் மீது பாறாங்கல்லை வைத்த லெனின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Kanyakumari police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe