தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்த 27-ஆம் தேதி, தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடிகளுக்கு சென்ற வண்ணம் இருந்தனர் மக்கள்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் – ஏழாயிரம்பண்ணை அருகிலுள்ள ரெட்டியபட்டியிலும், கிராமத்தினர் பலரும் வாக்களிக்கச் சென்றுவிட்டனர். அதுதான் தருணம் என, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுத்திரராஜன், வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். தனக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாத நிலையிலும் பலவந்தப்படுத்தியதால் கூச்சலிட்டாள் அந்தப் பெண்.

incident in viruthungar... police arrest

அது அபயக்குரல்தான் என்பதை உணர்ந்த கிராமத்தினர் திரண்டு சென்றனர். மாட்டிக்கொண்டான் சமுத்திரராஜன். “அவ குழந்தை மாதிரிடா.. ஊரு உலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாத அவளைப் போயி இப்படி பண்ணிட்டியேடா..” என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தியவர்கள், அவனைக் கட்டி வைத்து நையப் புடைத்தனர். “எந்த நேரத்துல என்ன வேலை பார்த்திருக்க? இந்தக் கைதானே இதெல்லாம் பண்ணுது?” என்று ஆளாளுக்கு உதைத்ததில், சமுத்திரராஜனின் வலது கை முறிந்தே போனது.

Advertisment

incident in viruthungar... police arrest

நடந்த களேபரத்தால் அந்தப் பகுதியில் வாக்குப்பதிவு தடைபட்டது. சமுத்திரராஜனை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லிவிட, ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீசார் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை மக்களிடம் காட்டினர். அதன்பிறகே, அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. சமுத்திரராஜனும் கைது செய்யப்பட்டான்.