incident in viruthunagar

விருதுநகர் மாவட்டம் – ஆமத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் கோடீஸ்வரனை ‘சஸ்பென்ட்’ செய்துள்ளார், விருதுநகர் எஸ்.பி. பெருமாள். காரணம் என்ன தெரியுமா?

எஸ்.எஸ்.ஐ.கோடீஸ்வரன் குடிப்பழக்கம் உள்ளவர். பணி நேரத்திலும் போதையில் திளைப்பவர். போலீஸ் அதிகாரி என்ற கெத்தோடு, மத்தியசேனையில் உள்ள அந்த டாஸ்மாக் கடையில், குவார்ட்டருக்கான விலையைக் குறைத்தே கொடுப்பது அவரது வழக்கம். அங்கு பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்களும், இதனைச் சகித்தே வந்துள்ளனர். இந்த நிலையில்தான், பாருக்குள் சென்றுஅவர் சீருடையோடு மது அருந்துவது வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனால்தான், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார், எஸ்.எஸ்.ஐ. கோடீஸ்வரன்.

Advertisment

மது அரக்கனிடம் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள், எங்கெங்கும் மலிந்து கிடக்கின்றனர். தெளிந்து திருந்தும் காலம் எப்போது வருமோ?