Advertisment

காவல்துறை அதிகாரியின் மகன் பணம் கேட்டு தாக்குதல்!  வைரலாகும்  வீடியோவால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே நகரை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணன் (20). இவர் அருகிலுள்ள தனியார் செராமிக் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன்நாள் (14-ஆம் தேதி) மாலை மொபைலுக்கு ரீ-சார்ஜ் செய்வதற்கு சென்றுகொண்டிருந்த போது கம்மாபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வரும் ரமேஷ்பாபு என்பவரது மகன் ஆகாஷ் மற்றும் அவரின் இரு நண்பர்கள் ராஜேஷ்கண்ணனிடம் காவல் அதிகாரியின் மகன் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 2 செல்போன் மற்றும் 14,500 பணத்தை பறித்து கொண்டு, பீர் பாட்டிலால் தலையில் பலமாக அடித்துள்ளனர். இதனால் நிலைகுலைந்து போன ராஜேஷ்கண்ணன் தலையில் பலத்த காயத்துடன் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

incident in viruthachalam... viral video

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதுகுறித்து புகாரளித்தும் காவல் துறையை சேர்ந்தவரின் மகன் என்பதால் விருத்தாசலம் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பணம் கொடுப்பதாக பேரம் பேசி வருவதாகவும், காவல்துறை சேர்ந்த ரமேஷ்பாபுவின் மகன் ஆகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,அடிபட்ட இளைஞர் குற்றம் சாற்றும் வீடியோ வாக்குமூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அதையடுத்து ரமேஷ்பாபுவின் மகன் ஆகாஷ், பரவளூரை சேர்ந்த அசோக்குமார் மகன் விஷ்வா, பாண்டா (எ)ராஜேஷ் ஆகியோர்மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறை ஏட்டுவின் மகன் குடித்துவிட்டு வழிப்பறியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

attack viral video police Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe