Advertisment

எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலத்தில் நிற்காததால் பயணிகள் கடும் அவதி!

incident in viruthachalam

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கில் தமிழக அரசால் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு போக்குவரத்து பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சென்னையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விருதாச்சலம் ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நேற்று முதல் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், விழுப்புரத்திலிருந்து மதுரைக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டன.

நேற்று காலையில் மதுரையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை விருதாச்சலம் ரயில் நிலையம் வழியாக வந்தது. ஆனால் ரயில் நிற்காமல் நேராக விழுப்புரம் சென்றது. விழுப்புரத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு மாலை 4:38 மணிக்கு விருதாச்சலம் ரயில் நிலையம் வழியாக வந்ததுபோதும் நிறுத்தப்படாமல் நேராக மதுரை சென்றது.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தை சுற்றி நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், பெண்ணாடம் அருகில் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகள், விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை என தொழில் நிறுவனங்கள் இயங்குவதால் அதில் பணியாற்றும் பல்வேறு பகுதிகளைசேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களைசேர்ந்தவர்கள் பயணிப்பதற்கு ஏதுவாக ஊரடங்குக்கு முன்பு அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் விருத்தாசலம் சந்திப்பில் நின்று செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று விடப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் சந்திப்பில் நிற்காததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். எனவே ரயில்வே துறை நிர்வாகம் உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் சந்திப்பில் நின்று செல்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Train corona virus viruthachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe