Skip to main content

எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலத்தில் நிற்காததால் பயணிகள் கடும் அவதி!

Published on 02/06/2020 | Edited on 03/06/2020

 

incident in viruthachalam

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.


கரோனா ஊரடங்கில் தமிழக அரசால் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு போக்குவரத்து பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சென்னையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விருதாச்சலம் ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் நேற்று முதல் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், விழுப்புரத்திலிருந்து மதுரைக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டன.

நேற்று காலையில் மதுரையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை விருதாச்சலம் ரயில் நிலையம் வழியாக வந்தது. ஆனால் ரயில் நிற்காமல் நேராக விழுப்புரம் சென்றது. விழுப்புரத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு மாலை 4:38 மணிக்கு விருதாச்சலம் ரயில் நிலையம் வழியாக வந்ததுபோதும் நிறுத்தப்படாமல் நேராக மதுரை சென்றது.

 

 


கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தை சுற்றி நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், பெண்ணாடம் அருகில் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகள், விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை என தொழில் நிறுவனங்கள் இயங்குவதால் அதில் பணியாற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்  பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயணிப்பதற்கு ஏதுவாக ஊரடங்குக்கு முன்பு அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் விருத்தாசலம் சந்திப்பில் நின்று செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று விடப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் சந்திப்பில் நிற்காததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். எனவே ரயில்வே துறை நிர்வாகம் உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் விருத்தாசலம் சந்திப்பில் நின்று செல்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தடம்புரண்ட ரயில்; அலறிய பயணிகள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
NN

ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.