விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி 6 வயது பெண் குழந்தை உயிரிழப்பு! காப்பாற்றச் சென்ற கர்ப்பிணித்தாய் கவலைக்கிடம்!

incident in virudhachalam

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைஅடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருபவர்கள் பாண்டியன்-கஸ்தூரி தம்பதியினர். இவர்களுக்கு 6 வயதில் தனுஷி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வீட்டின் முன்பு தனுஷி விளையாடிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக, கரும்புஏற்றிக்கொண்டு வேகமாக டிராக்டர்வருவதைப்பார்த்த கஸ்தூரி, தனது மகளைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் டிராக்டர் தாய் மற்றும் மகள்மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தனுஷிபரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மூன்று மாத கர்ப்பிணியான தனுஷியின் தாயார் கஸ்தூரி, தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident police virudhachalam
இதையும் படியுங்கள்
Subscribe