incident in virudhachalam

Advertisment

கடலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ப.எடக்குப்பம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குடும்ப பிரச்சனையில் தாய் பாக்கியலட்சுமி, மகள் திவ்யா (17வயது),மகன் திவாகர் (15 வயது) ஆகிய மூவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பாக்கியலட்சுமியின் கணவர் அடிக்கடி மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனமுடைந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.