Advertisment

மணிமுக்தாறில் மிதந்துவந்த ஆண் சடலம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

incident in virudhachalam

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை விட்டு, விட்டு பெய்து வருவதால், வயல்வெளிகள் மற்றும் தெருக்களில் ஓடுகின்ற நீரானது ஓடைகள் வழியாக மணிமுக்தாற்றை சென்றடைகிறது.

Advertisment

இந்நிலையில் விருத்தாச்சலம் பாலக்கரை மேம்பாலத்தின் கீழ்,ஆற்றில் அடையாளம் தெரியாத 35 வயது மிக்க ஆண் உடல் தண்ணீரில் மிதந்து வருவதாக விருத்தாசலம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் தண்ணீரில் அடித்து வரப்பட்ட நபரை மீட்டனர். ஆனால் தண்ணீரில் மிதந்து வந்த நபர் இறந்துவிட்டதால், அவரது உடலைப்பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் மணிமுக்தா ஆற்றில்வெள்ளப்பெருக்கு இருப்பதினால், குளிக்கச் செல்லும்போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது பாலத்தில் மேல் இருந்து தவறி விழுந்தாரா? மனநலம் பாதிக்கப்பட்டவரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

police rivers virudhachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe