நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மதியம் 2 மணிமுதல் 5 மணிக்குள்ளாக எடுத்து செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல்துறை பொது அமைதியின் பொருட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று சிலைகள் அனைத்தும் அந்தந்த பகுதி பக்தர்களால் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

incident in vinayagar chathurthi festival in nellai

இதையடுத்து இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வழக்கம்போன்று 5 மணிக்கு மேல்தான் சிலைகள் கரைப்பதற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து நகரின் காந்தி மண்டபம் அருகே சிலைகள் வைக்கப்பட்டன. தகவலறிந்து இடத்திற்கு வந்த சப் கலெக்டெர் மணீஷ் இந்து அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனையடுத்து இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்ட பிறகு சிலைகள் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. தற்போது மீதமுள்ள மூன்று சிலைகள் ஊர்வலமாக போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம்போல் நெல்லை ஆற்றில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.