விளாத்திகுளத்தில் கொடியேற்றுவதில் அ.தி.மு.க., தி.மு.க. மோதல் -போலீசார் தடியடி!

incident in vilathikulam

தூத்துக்குடியில் அ.தி.மு.க, தி.மு.கவினரிடையே கொடி ஏற்றுவதில் ஏற்பட்டமோதலால்அங்கு பதற்றமான சூழல் உருவாகிய நிலையில் போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அ.தி.மு.க சார்பில் கொடியேற்ற நிகழ்வுக்கு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறநிலையில் தி.மு.கவினரும் அதே பகுதியில் சென்று கொடியேற்ற அனுமதி வாங்கியுள்ளதாக கூறி கொடியேற்றமுற்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது.

அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அகற்றினர். அப்பொழுது சாலையில் தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.கவினரை அகற்ற முயன்றபோது அ.தி.மு.கவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கொடி ஏற்றுவதில்அ.தி.மு.க. - தி.மு.க. இடையேஏற்பட்ட பிரச்சனையை அடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

admk police tutucorin vilathikulam
இதையும் படியுங்கள்
Subscribe