வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அருகே உள்ள ஆச்சரியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 48 வயதான விஸ்வநாதன். நகை பொற்கொல்லர் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்து வருகிறார்.

Advertisment

incident in vellore...police investigation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இவருடைய 2 நாய்கள் அதே பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வரும் நாகராஜ் நிலத்துக்கு சென்றுள்ளது. அங்கு சென்றுகுலைத்ததாகதெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ்யும், அவரது மகனும் சேர்ந்து நாட்டு துப்பாக்கி எடுத்து இரண்டு நாய்களையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

இது தெரிந்து இப்படி அநியாயம் செய்துட்டிங்களே, வாயில்லா ஜீவனை சுட்டு தள்ளிட்டிங்களே என கேட்ட விஸ்வநாதனை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. அடி உதை வாங்கிய விஸ்வநாதன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து மார்ச் 1ந்தேதி சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தந்த தகவலின்பேரில் குடியாத்தம் தாலுக்கா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment