ஆற்றில் தள்ளி சிறுவன் கொலை... 7 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் கைது!

வேலூர் மாவட்டம், ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் குட்டி. இவரது 9 வயது மகன் ராகேஷ்குமார். குட்டி குடும்பத்தார்க்கும் அதே ஊரை சேர்ந்த பெருமாள் குடும்பத்தார்க்கும் இடையே குடும்ப தகராறு மற்றும் பண தகராறு இருந்துவந்துள்ளது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஊரில் இருந்து குட்டி மகன் ராகேஷ்குமாரை கடத்தினர் பெருமாள் மற்றும் காளியம்மாள்.

POLICE

அப்படி கடத்தி செல்லப்பட்ட ராகேஷ்குமாரை ஒகேனக்கல் ஆற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெருமாள் மற்றும் காளியம்மாளைபோலீஸார் தேடித்தேடி சலித்துப்போய் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் பெருமாள், காளியம்மாள் இருவரும் இருக்கும் இடம் தெரிந்து அவர்களை நெருங்க தொடங்கினர். கேரளா, கர்நாடகா என பதுங்கி அங்கேயே கூலி வேலை செய்துவந்த இருவரை ஏலகிரிமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

arrest police Vellore
இதையும் படியுங்கள்
Subscribe