
'நிவர்' புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் வேலூர்-திருவண்ணாமலைஇடையே அமைந்துள்ள 'அமிர்தி' என்ற இடத்தில் நேற்று காலை முதலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளம் பாயும்பகுதியில் பொதுமக்கள் நடமாடக் கூடாது என அறிவுறுத்தப்பட்ட போதிலும் அமிர்தி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முயற்சித்தனர்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞர் கையில் வைத்திருந்த சமையல்எண்ணெய்கேன்-ஐ தவறவிட்ட நிலையில்,எண்ணெய்க்கேன்-ஐ எடுப்பதற்காக இறங்கிய அந்த இளைஞர், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர், சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, மத்தூர்தரைப்பாலத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.அவரை சடலமாக மீட்டபொதுமக்கள் வனத்துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம்தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us