Skip to main content

தவறவிட்ட எண்ணெய் கேன்-ஐ எடுக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு!! 

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

incident in amirthi

 

'நிவர்' புயல் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் வேலூர்-திருவண்ணாமலை இடையே அமைந்துள்ள 'அமிர்தி' என்ற இடத்தில் நேற்று காலை முதலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளம் பாயும் பகுதியில் பொதுமக்கள் நடமாடக் கூடாது என அறிவுறுத்தப்பட்ட போதிலும் அமிர்தி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முயற்சித்தனர்.


அப்பொழுது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞர் கையில் வைத்திருந்த சமையல் எண்ணெய் கேன்-ஐ தவறவிட்ட நிலையில், எண்ணெய்க் கேன்-ஐ எடுப்பதற்காக இறங்கிய அந்த இளைஞர், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளார். காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர், சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, மத்தூர் தரைப் பாலத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை சடலமாக மீட்ட பொதுமக்கள் வனத்துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.