Advertisment

தவிக்கவிட்ட மகன்கள்... ஒரு கோடி ரூபாய் சொத்தை மீட்டெடுத்த தந்தை!

incident in vellore

Advertisment

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை கிராமத்தில் வசித்து வருபவர் 82 வயதான ரேணுகோபால். இவருக்கு மூன்று ஆண் மகன்கள், மூன்று பெண் மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது, அனைவரும் தங்களது மனைவி, மகன், மகள்களுடன் தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர்.

கடந்த 2013ஆம் வருடம், தனது மூன்று ஆண் மகன்களுக்கும்,அனைத்துச் சொத்துகளையும் எழுதிக் கொடுத்துள்ளார்ரேணுகோபால். 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கைக்கு வந்ததும், 3 மகன்களும் தந்தையைப் பராமரிக்காமல் கைவிட்டுள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக, வேலூர் கோட்டாச்சியரிடம் புகார் தந்துள்ளார் ரேணுகோபால். அதில், "தனது மகன்கள் தனக்குச் சாப்பிட உணவு கூட கொடுப்பதில்லை, நான் வாழ எந்த அடிப்படை வசதியும் செய்யாமல், தன்னை மிகவும் துன்புறுத்தி வருகிறார்கள்.இதனால், தான் எழுதிக் கொடுத்த சொத்துகளை, மறுபடியும் தன் பெயரில் எழுதி வைக்குமாறு" கேட்டு, வேலூர் வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் பெரியவர் கூறியது உண்மை எனத் தெரியவந்தது.பெற்றோர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டப் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ், ரேணுகோபால் தானமாக தன் மூன்று மகன்களுக்கும்எழுதிக்கொடுத்த அனைத்துச் சொத்துகளையும் ரத்துசெய்து மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே மாற்றியமைத்திடஉத்தரவிடப்பட்டது. அதற்கான உத்தரவு நகலை வேலூர் கோட்டாச்சியர், அந்தப் பெரியவரிடம் வழங்கினார்.

humanity Vellore
இதையும் படியுங்கள்
Subscribe