Advertisment

வேலூரில் இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை!

INCIDENT IN VELLORE

வேலூர் மாவட்டம், காட்பாடி மாருதி நகரில் வசிக்கிறார்கள் 17 வயதான பத்மபிரியா, ஹரிப்பிரியா. இருவரும் இரட்டையர்கள். தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். மே 19ந்தேதி காலை ஆன்லைன் வகுப்பு உள்ளது எனச்சொல்லி மாடியில் உள்ள ரூமுக்கு சென்றுள்ளனர். மதியம் உணவுக்கும் கீழே வரவில்லையாம். பெற்றோர்கள் நீண்ட நேரம் கதவு தட்டியும் வரவில்லை என்பதால் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்துள்ளனர்.

Advertisment

அப்போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைப்பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுபற்றி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து உடலை கைப்பற்றி, கீழே இறக்கி உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். எதனால் தற்கொலை செய்துக்கொண்டார்கள் என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sucide Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe