
திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டு அருகே 2 குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றுப்படுகை அருகே உள்ள ஒரு தனியார் தென்னந்தோப்பில் சரவணன் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணன் வெளிவேளையாகச் சென்றுவிட்டு வீடு திரும்பிவந்து பார்த்தபோது தனது மனைவி லட்சுமி, மகன் பாலசக்தி, மகள் விஸ்விதா ஆகியோரை காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றுத் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்த மூவரின் உடலையும் மீட்டனர்.

போலீசார் விசாரணையில் லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது குழந்தைகளைத் தூக்கி கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீசார் மூவரது உடலையும் உடற்கூறாய்விற்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)