
வாணியம்பாடி அருகே வலைதள ஸ்டேட்டஸ் மோகத்தால் இளைஞர் ஒருவர் டிராக்டரை இயக்க தெரியாமல் இயக்கி கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கிருஷ்ணன். இவரது மகன் சஞ்சீவ்.இவர் அவரது உறவினரான சௌந்தரராஜன்என்பவருடன் அருகில் உள்ள ராஜேந்திரன் என்பவருடைய விவசாய நிலத்திற்கு காலை சென்றுள்ளார். அப்போது ராஜேந்திரன் அவரது விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் ஏர் உழுது கொண்டிருந்தார். மதிய உணவு அருந்துவதற்காக ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்ற நிலையில் இளைஞர் சஞ்சீவ், ராஜேந்திரன் வயலில் நிறுத்தி சென்றடிராக்டரை இயக்கம் முயன்றுள்ளார். அதேபோல் டிராக்டரில் அமர்ந்து டிராக்டரை இயக்குவது போல் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து டிராக்டரை இயக்க முற்பட்ட சஞ்சீவ் தவறாக டிராக்டரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து சென்ற மீட்புப்படையினர் அருகில் விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார்களை பயன்படுத்தி நீரை அப்புறப்படுத்தினர். பின்னர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து இளைஞர் சஞ்சீவைசடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)