Advertisment

கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிப்பு... ஒரு கிலோ மீட்டர் துரத்தி நகை மீட்பு!

Incident in vaniyampadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில், இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார் அரூர் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன். பின்னால், அவரது மனைவி சோனியா அமர்ந்திருந்தார். அந்த தம்பதியர் சென்ற இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சோனியா கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் செயினைப்பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். கர்ப்பிணிமனைவியானசோனியாவைஅங்கேயே இறக்கிவிட்டு காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டு,தனது இருசக்கர வாகனத்தில் திருடனை துரத்தியுள்ளார் கணவர்பரந்தாமன்.

Advertisment

ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் விரட்டிச் செல்ல, ஒருகட்டத்தில் நகையையும், வாகனத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஓடியுள்ளான். இதுபற்றி போலீஸாருக்குக் கூற, வாணியம்பாடி நகர போலீஸார் அங்கு சென்றுள்ளனர். நகை மற்றும் அவன் ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தைப்பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

அந்த வண்டியின் எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த இருசக்கர வாகனம் ஏற்கனவே திருடப்பட்டதாகத்தேடப்பட்டு வந்ததுஎனத்தெரியவந்தது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Robbery vaniyambadi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe