incident at trichy railway station

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. இவர் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திருச்சி ஜவ்வுரயில் நிலையம் வந்தார். திருச்சி ரயில்வே ஜங்ஷனில், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடைக்கு உள்ளே வந்து கொண்டிருந்தபோது ஜெயச்சந்திரன் ரயில் பெட்டி படியில் நின்று கொண்டிருந்தார்.

Advertisment

ரயில் நிறுத்துவதற்கு முன்பே அவர் இறங்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தவறி விழுந்து நடைமேடைக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார் .இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக மீட்டனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஜெயச்சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருச்சி ரெயில்வே நிலையத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment