Advertisment

சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

incident took place near Moolakadai bus stand in Chennai

Advertisment

சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மூலக்கடை பேருந்து நிலையம் அருகே மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளை விஜயகுமார், மணிவண்ணன் ஆகிய இருவரும் வைத்திருந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்த போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் 2.7 கிலோ எடை ஆகும். இதன் மதிப்பு ரூ.27 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த போதைப்பொருட்களை வைத்திருந்த விஜயகுமார், மணிவண்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைதானவர்களில் விஜயகுமார் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இருவரிடமும் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Chennai NCB
இதையும் படியுங்கள்
Subscribe