
தூத்துக்குடியில் இருசக்கரவாகனத்தைக்கழுவுவதில் ஏற்பட்டதகராறில் நடந்த கொலை தொடர்பாக 10 பேரைபோலீசார்தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்ராஜகோபால்நகரைச்சேர்ந்தசுப்பையா, ஆவுடையப்பன் ஆகியோருக்கிடையே வீட்டின் முன் இருசக்கர வாகனம் கழுவுவது தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்துவந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விரோதத்தில்சுப்பையாமற்றும் அவரதுகுடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஆவுடையப்பனைவீட்டின் அருகே இருந்த மாட்டுத்தொழுவத்தில்வைத்துத் தாக்கி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ரத்தவெள்ளத்தில் ஆவுடையப்பன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் பெருமாள் காயமுற்றார். இந்த சம்பவம் தொடர்பாகபோலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சிப்காட்காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து சுப்பையா உள்ளிட்ட 10பேரைத்தேடிவருகின்றனர். இருசக்கர வாகனம் கழுவுவதில் ஏற்பட்டமோதல், கொலையில் முடிந்திருப்பது அங்குபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)