
திருவண்ணாமலையில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம்,லட்சுமிநகர்ப்பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.கூலித்தொழிலாளியான இவர் அவரது பிள்ளைகள்லக்க்ஷனா, பிரியதர்ஷினி, கரண் என்ற நால்வர் மற்றும் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு, சீனிவாசன்,யாகூப்,திலகவதி.பையூர்கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்,பிரணவ், சந்தியா என மொத்தம் 12 பேரும் ஆரணிநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் நேற்று முன்தினம்பிரியாணி சாப்பிட்டதாகக்கூறப்படுகிறது. அதேபோல் வீட்டுக்கும்பொட்டலம்வாங்கிச் சென்றுசாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த உணவகத்தில் சாப்பிட்ட அனைவருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 12 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் தனியார் மருத்துவமனையிலும்மற்ற 9 பேர் ஆரணி அரசு மருத்துவமனையிலும்சிகிச்சைபெற்று வந்த நிலையில்,லக்ஷனாஎன்ற 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை ஆனந்தன், பிரியதர்ஷினி, கரண் ஆகிய மூன்று பெரும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சென்னையில் காலாவதியான குளிர்பானத்தைவாங்கி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)