சீட்டு நடத்தி பொதுமக்களிடம் 14லட்சம் மோசடி...!! 

திருவண்ணாமலை நகரம் தேன்பழனி பகுதியை சேர்ந்தவர் விஜயன் மகன் 35 வயதான கார்த்திகேயன். இவர், தீபாவளி சீட்டு பிடித்திருந்துள்ளார். நகரம் மட்டும் அல்லாமல் சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களிலும் சீட்டு பிடித்துள்ளார். அந்த சீட்டு பணம் வசூல் செய்ய அதே பகுதியை சேர்ந்தவர்களை ஏஜென்டுகளாக நியமனம் செய்துள்ளார்.

incident in thiruvannamalai...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வேட்டவலம் அருகேயுள்ள ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி மரகதம். இவர் மூலம் அந்த கிராமத்தில் 60 பேரிடம் ஒரு மாதத்திற்கு ரூபாய் 600 வீதம், 12 மாதத்திற்கு, 7,200 ரூபாய் என நான்கு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து தந்துள்ளார்.

இதேபோன்று 10 ஏஜென்டுகள் மூலமாக195 நபர்களிடம் 14 லட்சத்து 4,000 ரூபாய் வசூல் செய்து தந்துள்ளார்கள். கடந்த தீபாவளியன்று அவர்களுக்கு தீபாவளி கிப்ட் தராமல் ஏமாற்றிவிட்டு கார்த்திகேயன் தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவளி சீட்டு கட்டியவர்கள் ஏஜென்டுகளிடம் பணத்தை கேட்டனர். இந்த பிரச்சனை தொடர்ந்து நடந்து வந்துள்ளது. கார்த்திகேயன் வரட்டும் பணம் வாங்கி தந்துவிடுகிறேன் எனச்சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திகேயன் சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார். அவரிடம் போய் பணம் கேட்க இல்லை என்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த மரகதம், திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை அழைத்து விசாரித்துள்ளார்கள், பணம் வாங்கியது உண்மை என தெரிய வந்ததால் பிப்ரவரி 29 ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

police thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe