INCIDENT IN THIRUPATHUR... POLICE INVESTIGATION

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக சென்னை-பெங்களுரூ தேசிய நாற்கர சாலை செல்கிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் ஒரு கும்பல் செல்போன்களை கொள்ளையடித்து வருவதாக நிறைய புகார்கள்அதிகரித்தநிலையில், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. காவல்துறை இந்த புகார்களை பெரும்பாலும் பதிவு செய்யவில்லையென்றாலும் கண்காணிப்பு மற்றும் விசாரணை நடத்திவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனிப்படை அமைத்து செல்போன் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு தேடலில், ஆம்பூர் மேல்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், ஆம்பூர் பெரிய வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர், கூர்ம பாளையம் திவாகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம்மிருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.திருடிய மற்ற செல்போன்கள் வாங்கிய நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களோடு சேர்ந்த செல்போன் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேரை வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு தேடி வருகின்றனர்.