திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் மலைப்பகுதியில் இயங்கி வருகிறது ஒரு கல் குவாரி. இந்த கல்குவாரி அருகில் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக இருப்பதாக ஆம்பூர் கிராமிய போலீஸாருக்கு தகவல் சென்றது.

Advertisment

incident in thirupathur... police investigation

அதனை தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் ஆம்பூரில் உள்ள பிரபல தோல் தொழிற்சாலை யில் பணியாற்றி வந்த சுமதி என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு திருமணமாகி விட்டதாம். சுமதி சந்தேக மரணம் குறித்து குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தவர்கள் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமதி எப்படி இங்கு வந்தார், இது கொலையா? அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident in thirupathur... police investigation

Advertisment

கடந்த 3 மாதத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இது மூன்றாவது கொலைசம்பவம்இதேபோன்று மூன்று பெண்களும்கல்குவாரி அருகே இறந்துகிடந்தனர்என்பது குறிப்பிடதக்கது. மேற்கண்ட இரண்டும் கொலை என்பதும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.