திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் முத்துக்குமார். 30 வயதான முத்துக்குமார் ஜோலார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

Advertisment

incident in thirupathur... police investigation

இவர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு காணாமல் போனார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தார் புகார் தெரிவித்திருந்தனர். போலீஸார் முத்துக்குமார் செல்போன் எண்ணை கொண்டு தேடினர், பின்னர் அவரது நண்பர்கள், குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

Advertisment

இந்நிலையில் ஜனவரி 21ந் தேதி மாலை ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி மலை முதலாவது வளைவில் அழுகிய நிலையில் ஒரு சடலம் இருப்பதாக அந்தவழியாக சென்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கூறினர். அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீஸார் சம்பவயிடத்துக்கு வந்து உடலை காண அது அழுகிய நிலையில் இருந்தது.

அந்த உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காணாமல் போன வழக்கை இறப்பு வழக்காக பதிவு செய்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment