Advertisment

பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் பலி... மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்களில்லை. மருத்துவர்கள் இருந்தாலும் சரியாக மருத்துவம் செய்வதில்லை, மருத்துவமனையை சரியாக பராமரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

Advertisment

INCIDENT IN  THIRUPATHUR... PEOPLE PROTEST

இந்நிலையில் திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் பரீதா. இவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது, அதனால் பரீதாவை ஜனவரி 20ந் தேதி இரவு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் இன்னும் வலி வரட்டும், வலி வரட்டும் என்றே கூறியுள்ளனர். இந்நிலையில் ஜனவரி 21ந்தேதி காலை பரீதா இறந்துட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் அவரது உறவினர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Advertisment

INCIDENT IN  THIRUPATHUR... PEOPLE PROTEST

மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டவர் இறந்தார் எனச்சொல்லி நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியான மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருந்தபடி திருப்பத்தூர் நகர காவல்நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளனர். அங்கிருந்து வந்த போலீஸார் உறவினர்களிடம் சமாதானம் பேசிவருகின்றனர். அதேநேரத்தில் மருத்துவமனையில் வேறு பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என பாதுகாப்புக்காக 30க்கும் மேற்பட்ட போலீஸாரை நிறுத்தியுள்ளனர்.

hospital people protest thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe