Advertisment

முதல்வர் பெயரிலான பேரவையின் மாநில தலைவர் காரில் செம்மர கட்டைகள்... அதிர்ந்த வனத்துறை!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி வழியாக வெள்ளக்குட்டை செல்லும் வனப்பகுதி சாலையில் வெள்ளக்கல் என்ற இடத்தில் ஆம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து அவ்வழியாக வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் சாலையில் ஓரம் நிறுத்தி விட்டு வனப்பகுதியில் மறைந்தனர்.

Advertisment

INCIDENT IN THIRUPATHUR... FOREST DEPARTMENT SHOCK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

வனப்பகுதி சாலையில் இனோவா கார் மற்றும் இரு சக்கர வாகனம் தனியாக நின்றுகொண்டிருந்ததை பார்த்த வனத்துறையினர் அதன் அருகே வந்து சுற்றும் முற்றும் பார்த்தனர். யாரும் இல்லாததால் காரை திறக்க முற்பட்டனர், ஆனால் கார் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த வனத்துறையினர் கார் கண்ணாடி வழியாக பார்த்த போது காருக்குள் செம்மரக்கட்டைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுப்பற்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

INCIDENT IN THIRUPATHUR... FOREST DEPARTMENT SHOCK

தகவலின் பேரில் ஆலங்காயம் ரேஞ்சர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் கார் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து ஆம்பூர் வன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரை சோதனையிட்ட போது அதில் சுமார் 500 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது.

செம்மரம் கடத்திய இந்த கார் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பேரவையின் தமிழக மாநில தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதில் அவர் போட்டோவுடன்கூடிய ஸ்டிக்கர் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். காரின் முகப்பிலும் அவரின் பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிப்பட்ட செம்மரகட்டைகள் மற்றும் வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ 15 லட்சம் ஆகும்.

INCIDENT IN THIRUPATHUR... FOREST DEPARTMENT SHOCK

ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதுமற்றும் கடத்துவதை தடுக்க காவல்துறை, வனத்துறை, சிறப்பு செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு பெரும் புள்ளிகளையெல்லாம் கைது செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரிலான பேரவையைதமிழகத்தில் தொடங்கி அதன் மாநில தலைவராக உள்ள பாஸ்கர் என்பரின் காரில் செம்மரம்சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thiruppathur jaganmohanreddy ysr congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe