incident in thirupathur

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாகபரவலானமழை பெய்து வருகிறது. இன்றும் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று அதேபகுதியை சேர்ந்த விவசாயி குணசேகரனின் மகன் அண்ணாமலை சென்றுள்ளார். மழைக்காக ஒரு மரத்தின் அருகே ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன்,மின்னல் ஏற்பட்டுள்ளது. இந்த மின்னல் அண்ணாமலையை தாக்கியதால்,சம்பவயிடத்திலேயே அவர்கருகி உயிரிழந்துள்ளார்.

Advertisment

incident in thirupathur

உயிரிழந்த அண்ணாமலை, மடவாளம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். 12ம் வகுப்பில்அவர்தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.