incident in thirupathur

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருஷோத்தம குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி அய்யம்மாள்,இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருடைய மகன் ராகுல்காந்திஅங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisment

மண்ணால் கட்டப்பட்ட கூரை வீடு இவர்களுடையது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு தொகுப்பு வீடு கேட்டு மனு தந்துள்ளனர். சமீபமாக தினமும் மாலை வேளையில் மழை வருகிறது. இதனால் ஒழுகும் நிலையில் உள்ள அந்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில் மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்துஜூலை 8 ந்தேதி இரவு அய்யம்மாள் இறந்துள்ளார். அவரது உடல் மண்ணுக்குள் புதைந்துள்ளது. ஜூன் 9 ந்தேதி காலை உடலை தோண்டி எடுத்துள்ளனர்.

incident in thirupathur

இவர்களுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்ட,ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்து தருவதாகக்கூறி அவர்களிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளைவாங்கிக்கொண்டு, வீடு கட்டி முடிக்கப்பட்டது என ஏமாற்றி1,70,000 ரூபாய்,அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனால்காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் வர அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Advertisment

முறையாக வீடு கட்டி தந்திருந்தால் இந்த பெண்மணி இறந்திருக்கமாட்டார். அதிகாரிகளின் கொள்ளையால் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலியாகியுள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி, சடலத்தை எடுக்க விடாமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றபின்பே மக்கள் சமாதானம் அடைந்தனர்.