Advertisment

வீட்டுக்குள் புகுந்த லாரி... ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!!

incident in thirupathur

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன கோமேஸ்வரம் கிராமத்துக்கு கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்துகிரானைட் கல் ஏற்றி வந்ததுலாரி. கற்களை இறக்கிவிட்டு வேலூர் நோக்கி ஜூலை 5ஆம்தேதி காலை சென்றது. லாரி பெங்களூர் டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழுந்த லாரி சாலை ஓரத்தில் கோவிந்தசாமி என்பவரின் வீட்டில் புகுந்தது.

அக்கம் பக்க வீட்டினர் மற்றும் சாலையில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று பார்த்தனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் துரைராஜ், உடல் நசுங்கி ஓட்டுநர் இருக்கையிலேயே இறந்துவிட்டார். லாரியில் இருந்த மற்றோர் ஓட்டுனரான வெங்கடேசன் மற்றும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த மூன்று குழந்தைகள், 2 பெண்கள் ஆக மொத்தம் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திக்கு வந்த ஆம்பூர் கிராமிய நிலைய போலீசார், பலியான லாரி ஓட்டுனர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident lorry thirupathur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe