incident in thirupathur

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடசேரியில் எழுத்தாளராக பணிபுரிபவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார். மே 25ந்தேதி இரவு செந்தில் குடும்பத்துடன் மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 18 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை திரும்ப வந்த செந்தில் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தர உமராபாத் காவல்நிலைய அதிகாரிகள் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றனர். வீட்டில் பதிவாகியுள்ள கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.

Advertisment

கரோனா ஊரடங்கால் கடந்த 55 நாட்களுக்கு மேலாக திருட்டு, கொலை, கொள்ளை என்பது நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதும் கொலை, கொள்ளை போன்றவை மீண்டும் தொடங்கியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.