incident in thirupathur

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் வசிக்கும்சிவக்குமார் என்பவர், தனது நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளார் என்கிற தகவல் ஆலங்காயம் காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜ்க்கு சென்றுள்ளது. அதனைதொடர்ந்து ரகசியமாக சென்று முதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். அங்கு சென்று பார்த்ததில்அது உண்மை என தெரியவர, ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் ஒரு டீம் நேரடியாக சென்று ரெய்டு செய்துள்ளனர்.

Advertisment

Advertisment

அதில் சிவக்குமார் தனது 20 சென்ட் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மல்லிகைப்பூ தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்திருப்பதை கண்டறிந்தனர். அதோடு, கஞ்சா இலைகளை பறித்தும் வீட்டில் மூட்டையில் வைத்திருந்துள்ளனர். 1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோவை பறிமுதல் செய்ததோடு கஞ்சா செடி வளர்த்த சிவக்குமாரையும்கைது செய்துள்ளனர்.

இதுப்பற்றி திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார், ஆலங்காயம் இன்ஸ்பெக்டர் உட்பட காவலர்களை பாராட்டி சன்மானம் வழங்கியதாக கூறப்படுகிறது.