Incident

அரசுப்பணியில் சேர்ந்து இரண்டாண்டு பணியாற்றிய ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்க அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 22 லட்ச ரூபாய் பணம் சிக்க அதிர்ச்சியாகியுள்ளனர்.

Advertisment

Incident

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளராக (சர்வேயர்) பணியாற்றி வருபவர் 37 வயதான பாலாஜி. மின்னூரை சேர்ந்த சேகர் என்பவர் தனது நிலத்தை அளந்து பதிவு செய்து தரவேண்டுமெனக் கேட்டு மனு செய்துள்ளார். அந்த மனு பாலாஜியிடம் வந்துள்ளது. நிலத்தை அளந்து பதிவு செய்து தர தனக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தரமுடியாது எனச்சொல்ல மிக கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார் பாலாஜி. இதில் அதிருப்தியான சேகர், வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். புகாரை பதிவு செய்த அவர்கள், மீண்டும் பேரம் பேசுங்கள் எனச்சொல்லி அனுப்பினர். அதன்படி பேரம் பேச, 8 ஆயிரம் தந்தால் அளந்து தருகிறேன் என்று சொல்லியுள்ளார் பாலாஜி. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை தந்து அனுப்பியுள்ளனர்.

Advertisment

Incident

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி பாலாஜியின் அலுவலகத்தில் வைத்து 8 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை சேகர் தந்துள்ளார். அதனை வாங்கி எண்ணி தனது பாக்கெட்டில் வைத்துள்ளார் பாலாஜி. அங்கு மறைந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பாலாஜியிடம் இருந்த பணத்தோடு அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 22 லட்ச ரூபாய் வரை பணம் சிக்கியுள்ளதுலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.