incident in thirupathur

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலத்தில் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீது ட்ராக்டர் மோதி, சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லி கல்குவாரிக்குசென்ற ட்ராக்டர் மோதியதில் 2 வயது குழந்தை தர்ஷன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யவும்,அதன் உரிமையாளரை கைது செய்யக் கோரியும்விண்ணமங்கலம்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.