Advertisment

கூலித் தொழிலாளி இறப்பு; கொலையா? விபத்தா? கேள்வி எழுப்பும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தில் வசிப்பவர் கூலித்தொழிலாளியான ஜெய்சங்கர். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்குஇரண்டு மகள்கள், ஒரு மகன் என உள்ளனர். டிசம்பர் 3-ஆம் தேதி அதே கிராமத்தைச்சேர்ந்த தாமோதரன் என்பவரின் கிணற்றில் இறந்துக்கிடந்தார். இதனால் ஜெய்சங்கரின்உறவினர்கள் மற்றும் அக்கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

மேலும்,அவரது சாவில் மர்மம் உள்ளது.அவர்அந்த கிணற்றுப்பகுதிக்கு போகவேண்டிய அவசியம்மில்லை. அதேபோல் அவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டிய அவசியம்மும்மில்லை. அதனால்இதுகுறித்துதீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என மாதனூர்-ஒடுக்கத்தூர் சாலையில் ஜெய்சங்கரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

Advertisment

இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலுக்கு பின்னர் போலீஸார் அங்கு வந்து, விசாரிக்கிறோம் என வாக்குறுதி தந்ததன் அடிப்படையில் சாலை மறியலை வாபஸ் பெற்றனர். ஜெய்சங்கர் இறந்துக்கிடந்த பகுதியில் கள்ளச்சாரயாம் விற்பனை நடைபெறுகிறது. அங்கு ஏதாவது தகராறு ஏற்பட்டு அடித்து கொலைசெய்து வீசப்பட்டாரா? அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கேள்விகள் எழுப்பும்பொதுமக்கள் இதுக்குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுக்கோள் வைத்துள்ளனர்.

police thirupathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe