/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ZXGFSFGSFSFSFSF.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் திருமணத்திற்காக வீட்டில் மின்விளக்கு அமைக்கும் பணியில் பார்சனாபள்ளி கிராமத்தை சேர்ந்தசோலைராஜன் என்ற 25 வயது இளைஞர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து கை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற உமராபாத் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த பார்சனாபள்ளி கிராம மக்கள் மற்றும் சோழராஜனின் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் குவிந்து கதறி அழுதனர். மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் மிக சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)