/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adadqeq1e_0.jpg)
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம். 55 வயதான சண்முகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துக்கொண்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 27ந்தேதி காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/120341963_3579807842069830_2453475589387772766_o.jpg)
அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார். இறந்த சண்முகம் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது, சண்முகத்தின் மனைவி, கீழ்நிலை காவல்துறையினர் உயர் அதிகாரிகளை காணும்போது, சல்யூட் செய்வது போல், சல்யூட் செய்து நெகழவைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adafsfgsf.jpg)
சண்முகத்தின் மனைவியிடம், உங்கள் கணவர், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர். அவரது குடும்பத்தை காவல்துறை கைவிடாது. உங்களுக்கான உதவிகளை நிச்சயம் அரசு செய்யும், நானும் அதற்கான முயற்சிகளை செய்கிறேன் என நம்பிக்கை அளித்தார். மறைந்த சண்முகத்துக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
கருணை அடிப்படையிலான பணி சண்முகம் வாரிசுகளில் ஒருவருக்கு வழங்க எஸ்.பி முயற்சி எடுத்துள்ளார். அந்த குடும்பத்தில் யார் விரும்புகிறார்களோ, தகுதியின் அடிப்படையில் பணி கிடைக்கும் என்றார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)