திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலூகா, பெரியாங்குப்பம் அரசமரத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் 17 வயதான தயாளன். 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு கே.ஏ.ஆர். பால்டெக்னிக்கில் படித்து வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2020-04-01 at 15.48.46.jpeg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தனது சக மாணவ நண்பர்களுடன் ஏப்ரல் 1ந்தேதி மதியம் தனது கிராமத்துக்குசென்று அருகில் உள்ள அரசமரத்தில் கயிறு மூலம் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டு இருந்துள்ளனர். தயாளன் ஊஞ்சலாடும்போது மரக்கிளை உடைந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். அவரைஉடனடியாக அங்கிருந்த இளைஞர்கள்ஒரு வாகனத்தில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலே உயிரிழந்தார்.
இதனால்உடலை திரும்ப வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுப்பற்றிய தகவல் போலீஸாருக்கு சென்றதும் ஆம்பூர் தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow Us