Advertisment

திருமணம் ஆன 40 வது நாளில் மருத்துவ மாணவி உயிரிழப்பு; தற்கொலையா? கொலையா?

கல்லூரிகளில் மாணவ மாணவிகள் தற்கொலை என்பது தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சி அரசு மருத்துவகல்லூரியில் எம்.எஸ்.படிக்கும் மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

incident in thiruchy... police investigation

கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்தவர் தென்னிவளவன். ஓய்வு விஏஓ. இவரது மகள் கயல்விழி (22). இவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.எஸ் படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் தான் திருமணம் நடந்திருக்கிறது. இவரது கணவர் சக்திகணேஷ். இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார்.

Advertisment

incident

இந்நிலையில் இன்று காலை கயல்விழி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கண்டோன்மென்ட் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த கயல்விழியின் உறவினர்கள் கயல்விழியின் உடலில் காயங்கள் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

commit suicide Medical Student murder police thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe