/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xdADADADA.jpg)
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us