கடனுக்கு வட்டி செலுத்தாததால் தாக்குதல்... திரைப்பட நடிகர் உட்பட இருவர் தலைமறைவு!

incident in thiruchy

திருச்சி ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான ஆறுமுகம் என்பவர் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது 3 பேரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். மேலும் தென்னூர்என்ற பகுதியில்கட்டி வைத்து மூன்று பேரும் ஆறுமுகத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கந்துவட்டி கொடுமையால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. ஜெரால்ட் என்பவர் 2019 ஆம் ஆண்டு ஆறுமுகத்திற்கு 35,000 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், இந்தக் கடன் தொகைக்கு முறையாக வட்டிசெலுத்தப்பட்டு வந்த நிலையில் கரோனாகாரணமாக சில மாதங்களாக முறையாக வரி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் ஜெயராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

incident in thiruchy

அதேபோல் இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள திரைப்படநடிகர் ஜெரால்ட் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Investigation police thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe