Advertisment

கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை!!

incident in thiruchy

தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் தொற்றுவேகமாக பரவிவருவதால் அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு படையெடுத்துச் சென்றனர் தொழிலாளர்கள், தற்பொழுது தமிழகம் முழுவதும் பயணிக்க தொடங்கியுள்ளனர் இதனால் தமிழகம் முழுவதும் பரவல் அதிகரித்துள்ளது.

Advertisment

இப்படிதான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 54 வயதுக்காரர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனாகண்டறியப்பட்டது. 16 ந் தேதி அவரை புதுக்கோட்டை அரசு ராணியார்மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் அவர் சடலமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து மீட்டுள்ளனர்.கரோனா சிகிச்சைக்கு வந்தவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது குறித்து விசாரணைநடந்துவருகிறது.

thiruchy corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe